மண்ணுக்காய் மடிந்தவரே மன்னித்துக் கொள்ளுங்கள்

மண்ணுக்காய் மடிந்தவரே மன்னித்துக் கொள்ளுங்கள்  நாங்கள் மனிதர்கள் எங்களின் உயரத்துக்கு ஏற்பவே எங்களால் பார்க்க முடிகிறது உங்களின் உச்சங்களை உணரக்கூட முடியவில்லை ஏனெனில்நாங்கள் மனிதர்கள் பசிக்கும் தாகத்துக்கும் அப்பால்செவிக்கும் விழிக்கும் எனவிருந்து தேடி அலைபவர்கள் அது கிடைக்கும் இடமெல்லாம்மண்டியிட்டு தலைசாய்த்துமாமனிதன் இவனென்று மணியாரம் கொடுப்பவர்கள்ஏனெனில்நாங்கள் மனிதர்கள் சோலைதனில் ஆடுகின்றசேலைகளை  தரிசிக்கசாலை நிரப்பி நிற்கும் சாதாரண மனிதர்கள் மண்ணுக்காய் மடிந்தவரே மன்னித்துக் கொள்ளுங்கள் ஏனெனில் நாங்கள் மனிதர்கள் அயல் வாழ வேண்டுமென புயலாகி வெடி சுமந்த உங்களைப்போல் அல்ல நாங்கள்  எங்கள் நாட்களை எங்களுக்காகவே வாழத்துடிப்பவர்கள் எனது கனி எனக்கேயென பொத்திக் காக்கும்புது மரங்கள் ஊர்கூடி போராடும் … Continue reading மண்ணுக்காய் மடிந்தவரே மன்னித்துக் கொள்ளுங்கள்